இந்தியாவைத் தொடர்ந்து சீனாவின் புதிய வரைபடத்திற்கு தென்கிழக்காசிய நாடுகளும் எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
சர்ச்சைக்குரிய சீனாவின் புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில், தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டின் பகுதிகளை சேர்த்ததாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், தற்போது வியட்நாமும் சீனாவின் வரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தோ-பசிபிக் பகுதியில், கிழக்கு கடல் பகுதியில் உள்ள வியட்நாமிற்கு சொந்தமான பாராசெல் மற்றும் ஸ்ப்ராட்லியை, சீனா தனது பகுதியாக வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, கிழக்குக் கடலில் உள்ள "ஒன்பது-கோடு கோடு" அடிப்படையிலான சீனாவின் கடல்சார் உரிமைகோரல்களை உறுதியாக நிராகரித்துள்ளது.
Issues behind Chinese new map
சீனாவின் சர்ச்சைக்குரிய வரைபடத்தின் பின்னணி
சீனா கடந்த ஆகஸ்ட் 28இல் வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவிற்கு சொந்தமான அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை தனது நாட்டின் ஒரு அங்கமாக சேர்த்திருந்தது.
இது தவிர, சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடும் தைவான் மட்டுமல்லாது தென்கிழக்காசிய நாடுகளின் பல பகுதிகளையும் உரிமை கொண்டாடி வருகிறது.
சீனா வரைபடம் வெளியிட்ட பிறகு இந்தியா அதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்ததோடு, இந்தியாவின் நிலப்பரப்பைக் கோருவதற்கு சீனாவுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறியது.
சீனத் தரப்பில் இருந்து இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லைப் பிரச்சினையின் தீர்வை சிக்கலாக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் மற்ற நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும், சீனா இந்த வரைபடம் ஒரு வழக்கமான நடைமுறைதான் எனக் கூறி வருகிறது.