அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24ஆம் தேதி கடலில் கலக்கவிட ஜப்பான் திட்டம்
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வரும் வியாழக்கிழமை சிதைந்த போன ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து 1 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் கலக்கவிட போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு, ஜப்பானில் மிகப்பெரும் நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமிகள் பதிவாகின. இதனால், ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்து மின் இணைப்புகளை துண்டித்தது. மின்சாரம் இல்லாததால், அந்த அணுமின் நிலையத்தில் அணுவை குளிர்விக்கும் சாதனம் செயலிழந்தது. இதனையடுத்து, கதிரியக்க எரிபொருட்கள் கடலில் கலக்க தொடங்கின. கதிரியக்க எரிபொருட்கள் கடலில் கலப்பதை இதுவரை ஜப்பான் தடுத்து வந்தது. தற்போது சேமித்து வைத்த அனைத்து கதிரியக்க நீரையும் சுத்திகரித்து கடலில் கலக்கவிட ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
ஜப்பானின் கடல் உணவுகளுக்கு தடை
கதிரியக்க மாசு என்பது மிக மோசமான வகை மாசு ஆகும். பொது இடத்தில அதிக கதிரியக்க மாசு இருந்தால், மனிதர்களுக்கு புற்றுநோய், இரத்த-சோகை, இரத்தப்-புற்றுநோய், ரத்தக்கசிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற மிக ஆபத்தான நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது. மேலும், சுத்திகரிப்படாத கதிரியக்க நீர் கடலில் கலப்பட்டால் அது கடல் வாழ் உயிரினங்களையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாக பாதிக்கும். எனினும், தற்போது 'சுத்திகரித்த' கதிரியக்க நீரைதான் கடலில் கலக்கவிடப்போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள் ஜப்பானுக்கு சென்று இந்த திட்டத்தை பாரியிட்ட பின் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், கதிரியக்க நீரை கடலில் கலக்காவிடபோவதால், ஜப்பானின் கடல் உணவுகளுக்கு தடை விதிக்கப்போவதாக சீனா மற்றும் ஹாங்காங் அறிவித்துள்ளது.