
பாகிஸ்தான்: டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியதால் 16 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டீசல் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதி தீப்பற்றி எரிந்ததால் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 40 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து, டீசல் டிரம்ஸ் ஏற்றிச் சென்ற பிக்-அப் டிரக் மீது மோதி தீப்பிடித்தது.
பிண்டி பட்டியனுக்கு அருகில் உள்ள பைசலாபாத் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் பல பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
கராச்சியிலிருந்து இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, பிண்டி-பட்டியன் இன்டர்சேஞ்ச் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பிக்-அப் டிரக் மீது மோதியது.
டியூ
மீட்கப்பட்ட 16 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும்
காயமடைந்தவர்கள் உடனடியாக பிண்டி பட்டியன் மற்றும் பைசலாபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்தில் இருந்து மீட்கப்பட்ட 16 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டீசல் ஏற்றிச் செல்லும் லாரியாக அது இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்காது என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) மோட்டார்வே போலீஸ் சுல்தான் கவாஜா கூறியுள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பஞ்சாப் காபந்து முதல்வர் மொஹ்சின் நக்வி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.