சிங்கப்பூரின் அதிபர் ஆன தமிழர்: யாரிந்த தர்மன் சண்முகரத்தினம்?
செய்தி முன்னோட்டம்
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார்.
சீன வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்களை தோற்கடித்து, தர்மன் சண்முகரத்தினம் வெற்றி வாகை சூடியுள்ளார்.
இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற போட்டியாளர்களான எங் கோக் சாங் மற்றும் டான் கின் லியான் ஆகியோர் 15.7 சதவீதம் மற்றும் 13.88 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தவ்க்ஜ்ன்
யாரிந்த தர்மன் சண்முகரத்தினம்?
தர்மன் சண்முகரத்தினம், இந்திய மற்றும் இலங்கைத் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவரது மூதாதையர்கள் 19ஆம் நூற்றாண்டிலிருந்தே சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர்.
சிங்கப்பூர் புற்றுநோய் பதிவேட்டை நிறுவி, புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய "சிங்கப்பூர் நோயியலின் தந்தை" என்று அழைக்கப்படும் மருத்துவ விஞ்ஞானி எமரிட்டஸ் பேராசிரியர் கே. சண்முகரத்தினத்தின் மூன்று குழந்தைகளில் இவரும் ஒருவர் ஆவார்.
தர்மன் சண்முகரத்தினம் இதற்குமுன் பொருளாதார நிபுணராக இருந்தார்.
2001-பொதுத் தேர்தலின் மூலம் அரசியலில் நுழைந்த இவர்,2006, 2011, 2015 மற்றும் 2020இல் நடந்த பொதுத் தேர்தல்களில் நான்கு முறை தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 முதல் 2019 வரை சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.