முக்கிய அறிவிப்பு: செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
செய்தி முன்னோட்டம்
ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று நாள் பயணமாக செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வர உள்ளார்.
இது குறித்த அறிவிப்பை அமெரிக்க வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 22) அன்று வெளியிட்டது.
அமெரிக்க அதிபரின் இந்த பயணத்தின் போது மிக மிக முக்கியமான உலக விவகாரங்கள் விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம், உக்ரைன் போர், உலக வங்கியின் திறன்களை உயர்த்துதல் போன்ற பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளை உச்சிமாநாட்டின் போது பைடன் விவாதிக்க உள்ளார்.
செப்டம்பரில் நடக்க இருக்கும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் ஜி 20 தலைமையையும் பைடன் பாராட்டுவார் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
டுய்ஹ்வ்
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மூன்று நாள் விடுமுறை
டிசம்பர் 1, 2022அன்று இந்தோனேசியாவில் வைத்து ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக்கொண்டது.
ஜி20 உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு புது டெல்லியில் வைத்து செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெறும் உலகத் தலைவர்களின் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி-20 உச்சிமாநாட்டை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அலுவலகங்களும் செப்டம்பர் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மூடப்பட இருக்கிறது.
இதற்கிடையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் அமெரிக்க-ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.