Page Loader
இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை 
பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை 

எழுதியவர் Sindhuja SM
Sep 16, 2023
06:03 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற மூன்று பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தின் போது, பயங்கரவாதிகள் தப்பிக்க உதவுவதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் மறைமுக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த நடவடிக்கை குறித்து, பிர் பஞ்சால் படையின் தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ் தில்லான் பேசி இருக்கிறார்.

டொன்வ்க்

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது 

"மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். எச்சரிக்கை துருப்புக்க அவர்களை எதிர்த்து துப்பாக்கி சூடு நடத்தின. அதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மூன்றாவது பயங்கரவாதி கொல்லப்பட்டார், ஆனால் அவரது உடலை மீட்கும் போது எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு மூலம் குறுக்கிடப்பட்டது," என்று பிரிகேடியர் தில்லான் கூறியுள்ளார். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடலில் இருந்து இரண்டு ஏகே ரைபிள்கள், ஒரு கைத்துப்பாக்கி, ஏழு கைக்குண்டுகள், ஒரு ஐஇடி மற்றும் பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் ஆகியவை மீட்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2021 முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில்(எல்ஓசி) துப்பாக்கிச் சூட்டை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.