ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது
செய்தி முன்னோட்டம்
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சில மணிநேரங்களுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோஷகானா வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது சைபர் வழக்கில், பாகிஸ்தான் ரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது, அரசியல் நோக்கங்களுக்காக ரகசிய ராஜதந்திர கேபிளை(சைபர்) அவர் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சில மணிநேரங்களுக்கு முன்பு தான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து, அவரை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் கைது
Hours After Getting Bail in Toshakhana Case, Imran Khan Arrested in Cypher Casehttps://t.co/1Q0PeVMj5V pic.twitter.com/BCxcYqRxEI
— TIMES NOW (@TimesNow) August 29, 2023