Page Loader
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்
இந்த மனு மீதான தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்

எழுதியவர் Sindhuja SM
Aug 29, 2023
02:26 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோஷகானா வழக்கில் இன்று(ஆகஸ்ட் 29) ஜாமீன் பெற்றார். இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியது. மேலும், இந்த மனு மீதான தீர்ப்பை வரும் திங்கள்கிழமைக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இன்று இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கிய இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் தீர்ப்பை ஒத்திவைத்தனர். தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

டொய்ஜ்ன்வெ

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு

இதனையடுத்து, பிடிஐ தலைவர் ஜமான் பார்க் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருத்தது. கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குள் தனது தண்டனையை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மேல்முறையீடு செய்தார். ஆகஸ்ட் 22ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் முறையான விசாரணையைத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை தனது வாதத்தை முடித்த இம்ரான் கானின் வழக்கறிஞர் லத்தீப் கோசா, இந்த தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டது என்றும் இதில் குறைபாடுகள் நிறைய இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது இம்ரான் கானின் தண்டனை இடை நிறுத்தப்பட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.