உலக செய்திகள்
இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்
ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை திரும்பப் அனுப்புவதாக அதிபர் முகமது முய்சு கூறியதை, மாலத்தீவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கடுமையாக சாடியுள்ளார்.
தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை(உள்ளூர் நேரம்) அவரது சொந்த மாநிலமான தெற்கு கரோலினாவில் நடந்த முக்கியமான குடியரசுக் கட்சியின் தேர்தலில் நிக்கி ஹேலியை தோற்கடித்தார்.
போர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம்
இஸ்ரேலின் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் சிவில் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக வடக்கு காசாவிற்கு வழங்கி வந்த உணவு விநியோகத்தை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்(WFP) இடை நிறுத்தியுள்ளது.
அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி?
24 வயதான மென்பொருள் பொறியியலாளர் அஸ்வின் ராமசாமி, மாநில செனட் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அரசியலில் நுழையும் முதல் Gen Z இந்திய-அமெரிக்கர் என்ற பெயரை எடுத்துள்ளார்.
உலக தாய்மொழி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்
மொழி என்பது மனிதர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டும்தான் என்று பலரும் தவறாக நினைத்துகொண்டிருக்கிறார்கள்.
வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ ஃபாலோ செய்யும் நாடுகள்
உலகில் உள்ள பல நாடுகளில் பல்வேறு விதமான வேலை கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்றன.
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் உயிரிழப்புக்கு பின்னால் இருக்கும் மர்மம்: அவரது உடலில் காயங்கள் இருந்ததாக தகவல்
பிரபல ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும் அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சகருமான அலெக்ஸி நவல்னி உயிரிழந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆர்க்டிக்கில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
யூடியூப் முன்னாள் CEOவின் மகன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்பு
யூடியூப்பின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கியின் மகனான மார்கோ ட்ரோப்பர்(19), செவ்வாய்கிழமை(பிப்ரவரி 13) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருக்கும் தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம்
நாட்டிலுள்ள அனைத்து UNRWA அலுவலகங்களையும் இஸ்ரேல் மூட திட்டமிட்டுள்ளது.
சிறுவர் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதற்காக ஹங்கேரியின் ஜனாதிபதி ராஜினாமா
ஹங்கேரியின் ஜனாதிபதி கட்டலின் நோவக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம்
பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள சோட்வான் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு
மாலத்தீவின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை இன்று நடைபெறும் அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டை உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (யுபி ஏடிஎஸ்) போலீஸ் கைது செய்துள்ளது.
பாரிஸ் நகரத்தில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 3 பேர் காயம்
பாரிஸ் நகரத்தில் உள்ள பாரிஸ் கேர் டி லியோன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று கத்திக்குத்துத் தாக்குதலால் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு
கனடா நாட்டின் தேர்தலில் இந்தியா தலையிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கனடாவின் மிக உயர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை, சமீபத்திய உளவுத்துறை அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானியப் படைகள் மற்றும் தெஹ்ரான் ஆதரவு போராளிக் குழுக்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை அமெரிக்க இராணுவம் பதிலடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதனால், 18 பேர் கொல்லப்பட்டனர்.
H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா
அமெரிக்காவிற்கு குடியேற விரும்பும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமான விசாக்களாக கருதப்படும் H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
சர்வதேச மாணவர்களை சேர்ப்பதற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஒரு கனடா மாகாணம்
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா திங்களன்று(உள்ளூர் நேரம்) சர்வதேச மாணவர்களைச் சேர்க்க விரும்பும் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை பிப்ரவரி 2026 வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் தாக்குதல்
22 இந்தியர்களை ஏற்றி சென்ற பிரிட்டிஷ் எண்ணெய் டேங்கர் மீது ஹூதி போராளிகள் நேற்று தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
மோசமடையும் இந்தியா-மாலத்தீவு உறவுகள்: சீன உளவுக் கப்பலை வரவேற்க தயாரானது மாலத்தீவு
சீன ஆராய்ச்சி கப்பலான சியான் யாங் ஹாங் 03, அடுத்த மாத தொடக்கத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலேயில் நிறுத்தப்படும் என்று மாலத்தீவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை அறிவித்தது கனடா
கனடாவில் நிலவும் வீட்டு நெருக்கடி பிரச்சனைகள், சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை குறைக்க செய்துள்ளது.
சிகாகோ அருகே 2 இடங்களில் 8 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளிக்கு வலை வீச்சு
அமெரிக்காவின் சிகாகோ புறநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு பதிவாகி இருக்கிறது. அந்த துப்பாக்கி சூட்டை நடத்திய ஒரு நபர் 8 பேரை சுட்டுக் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோய் பரவலுக்கு வாய்ப்பு: WHO எச்சரிக்கை
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,கோவிட்-19 தொற்றுநோயை விட 20 மடங்கு ஆபத்தான தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மீண்டும் எச்சரித்துள்ளார்.
மெக்சிகோவில் திறக்கப்பட்டது அந்நாட்டின் முதல் ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் போது மெக்சிகோவில் அந்நாட்டின் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டது.
அமெரிக்காவில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்: 2 வாரங்களில் 6 கோவில்கள் தாக்கப்பட்டதாக தகவல்
அமெரிக்கா: கடந்த இரண்டு வாரங்களில் கலிபோர்னியாவில் உள்ள பல இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர்
தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால்ல் 47 பேர் புதையுண்டனர். மேலும் 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் வழியாக சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம்
இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறிய சார்ட்டர் ஜெட் விமானம் சனிக்கிழமை மாலை ஆப்கானிஸ்தானின் ரேடார் திரைகளில் இருந்து காணாமல் போனதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு ஒரு சிறுவனின் விமானப் பயணத்திற்கு இந்தியா வழங்கிய டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்ததை அடுத்து, மாலத்தீவில் ஒரு 14 வயது சிறுவன் நேற்று உயிரிழந்தான், என்று மாலத்தீவு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ள்ன.
சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவ பரிந்துரைத்தார் அமெரிக்க அதிபர் பைடன்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் வெள்ளிக்கிழமை(உள்ளூர் நேரம்) பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதித்தார்.
'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா
இந்தியா-மியான்மர் எல்லையில் ஊடுருவலை தடுக்க விரைவில் வேலி அமைக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியுள்ளார்.
பன்னூன் கொலைச் சதியில் ஈடுபட்ட இந்தியரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம்: செக் நீதிமன்றம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் குப்தாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்று செக் குடியரசில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானில் உள்ள "பயங்கரவாத மறைவிடங்கள்" மீது பாகிஸ்தான் 2 நாட்களுக்கு முன் தாக்குதல்களை நடத்தியது.
ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன?
ஈரான்-பாகிஸ்தானுக்கு இடையே கடந்த இரு நாட்களாக நடைபெற்ற வான்வெளி தாக்குதல் உலக நாடுகளை சற்றே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பாகிஸ்தான் மீது திடீர் தாக்குதல்: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்
நேற்று பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரான் தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியதுடன், ஈரானில் உள்ள தனது நாட்டு தூதரையும் நாட்டுக்கு திரும்ப வருமாறு பாகிஸ்தான்.வலியுறுத்தியுள்ளது.
உலகின் 10 வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள்: 10வது இடத்தில் அமெரிக்கா
பணம் என்பது உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. அதோடு, அது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.
2வது ஆண்டாக மக்கள் தொகை வீழ்ச்சி: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க போராடும் சீனா
1950ஆம் ஆண்டு ஐநா மக்கள் தொகை தரவுகளை சேகரிக்கத் தொடங்கியதில் இருந்து, உச்சத்தில் இருந்த சீனாவின் மக்கள் தொகை முதல்முறையாக கடந்த ஆண்டு சரியத் தொடங்கியது.
இந்தியா-கனடா பிரச்சனை: கனடா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் வீழ்ச்சி
கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான இராஜதந்திர மோதல் காரணமாக, இந்திய மாணவர்களுக்கு கனடா வழங்கிய படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கை கடுமையாக சரிவடைந்துள்ளது.
பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல்-அட்ல் பயங்கரவாதக் குழுவின் இரண்டு முக்கியமான தளங்களை தாக்கியதாக ஈரான் அறிவித்தது.
மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்?
மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய படைகளை திரும்பப்பெறுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு கேட்டு கொண்டுள்ளது.
செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்?
சர்வதேச கடல் வழியில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் சமீப காலமாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஹூதி கிளர்ச்சியாளர் என்றால் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.