சிறுவர் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதற்காக ஹங்கேரியின் ஜனாதிபதி ராஜினாமா
செய்தி முன்னோட்டம்
ஹங்கேரியின் ஜனாதிபதி கட்டலின் நோவக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமாவிற்கு பிறகு அவர்,"சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் உடந்தையாக இருந்த ஒருவரை மன்னித்து தவறு செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.
ஹங்கேரியில், நீண்டகாலமாக ஜனாதிபதியாக பணியாற்றிய எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.
46 வயதான கட்டலின் நோவக், சனிக்கிழமையன்று ஒரு தொலைக்காட்சி செய்தியில், தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஏப்ரல் 2023இல், அரசால் நடத்தப்படும் குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகங்களை மறைத்ததற்காக குற்றவாளி ஒருவருக்கு அவர் பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.
அவர் பொது மன்னிப்பு வழங்கியது தெரியவந்ததையடுத்து கிளம்பிய பொதுமக்களின் சீற்றத்தினை அடுத்து, அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார்.
கட்டலின் நோவக்
யார் இந்த நோவாக்?
நோவாக்கின் ராஜினாமா ஹங்கேரியின் தேசியவாத ஆளும் கட்சியான ஃபிடெஸின் அரசியல் பயணத்தில் ஒரு மிகப்பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.
இது 2010 முதல் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கிறது. எனினும் முன்னதாக பிரதம மந்திரி விக்டர் ஓர்பனின் தலைமையின் கீழ், ஃபிடெஸ் கட்சி, ஜனநாயக நிறுவனங்களை தகர்த்து தேர்தல் முறையை மோசடி செய்ததாகவும், ஊடகங்களை தங்களுக்கு ஆதரவாக செயல்படும்படி நிர்பந்தித்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது.
முன்னதாக, நோவாக், பிரதமர் ஆர்பனின் நம்பிக்கைக்குரியவர் என்றும் ஃபிடெஸின் முன்னாள் துணைத் தலைவர், ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படும் வரை, அவர் குடும்பங்களுக்கான ஹங்கேரியின் அமைச்சராக பணியாற்றினார்.
இவர் ஹங்கேரி வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி மற்றும் இப்பதவியை வகித்த மிக இளைய நபர் ஆவார்.