
உலகின் 10 வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள்: 10வது இடத்தில் அமெரிக்கா
செய்தி முன்னோட்டம்
பணம் என்பது உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. அதோடு, அது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.
பண மதிப்பு ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான நிதி ஆரோக்கியத்திற்கு ஒரு சான்றாகும்.
அது உயரும் போது, அதன் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை, முதலீடுகளை ஈர்த்து, சர்வதேச கூட்டாண்மைகளை வளர்க்கிறது.
பண மதிப்பு அதிகம் உள்ள நாடுகள், பொருளாதார சிக்கல்களை எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுகிறது. உலகளாவிய வர்த்தகம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிலையில், பணமதிப்பு அதிகம் உள்ள நாடுகள் இந்த வர்த்தக வலையில், ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் புழக்கத்தில் உள்ள 180 நாணயத்தினை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கரித்துள்ளது.
card 2
பணத்தின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?
சில நாணயங்கள் பிரபலமானவை மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
எனினும் அந்த காரணத்தில் மட்டுமே, அவற்றின் மதிப்பு அல்லது வலிமையை தீர்மானிக்க முடியாது.
பண மதிப்பு என்பது வழங்கல் மற்றும் தேவையினை பொருத்தும், வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் முதல் புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மை வரையிலான காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
ஒரு வலுவான நாணயம், ஒரு நாட்டின் வாங்கும் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உலக அரங்கில் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
அந்த வகையில் உலகின் வலிமையான 10 நாணயங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது (இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில்). அவற்றின் முக்கியத்துவத்திற்கு பங்களிக்கும் காரணிகளுடன் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.
card 3
முதலிடத்தில் குவைத் தினார்
இந்த பட்டியலில் முதல் இடத்தில், குவைத் தினார் உள்ளது.
ஒரு குவைத் தினார் என்பது ரூ.270.23 மற்றும் $3.25 ஒப்பாகும்.
அடுத்தது பஹ்ரைன் தினார். இதன் மதிப்பு ரூ.220.4 மற்றும் $2.65 ஆகும்.
அடுத்து, ஓமானி ரியால்(ரூ.215.84 மற்றும் $2.60), அதைத் தொடர்ந்து ஜோர்டானிய தினார் (ரூ.117.10 மற்றும் $1.141), ஜிப்ரால்டர் பவுண்ட் (ரூ.105.52 மற்றும் $1.27), பிரிட்டிஷ் பவுண்ட்(ரூ. 105.54 மற்றும் $1.27), கேய்.99 $1.20), சுவிஸ் பிராங்க் (ரூ. 97.54 மற்றும் $1.17) மற்றும் யூரோ(ரூ. 90.80 மற்றும் $1.09).
சுவாரஸ்யமாக, அமெரிக்க டாலர் இந்த பட்டியலில் கடைசியாக உள்ளது. ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ₹ 83.10. இந்திய பணம், இந்த பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது.