மெக்சிகோவில் திறக்கப்பட்டது அந்நாட்டின் முதல் ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவிலின் குடமுழுக்கு இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் போது மெக்சிகோவில் அந்நாட்டின் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டது. புதிதாக மெக்சிகோவில் திறக்கப்பட்ட கோவில் குவெரெட்டாரோ நகரில் உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பூசாரி ஒருவரால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோவில் திறக்கப்பட்டது. அந்த கோவிலுக்கான சிலைகள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குவெரேட்டாரோவில் உள்ள ராமர் கோவிலின் பிரான் பிரதிஷ்டா நடந்து முடிந்ததாக மெக்சிகோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. "இந்திய புலம்பெயர்ந்தோர் பாடிய பஜனைகளால் வளிமண்டலமே தெய்வீக சக்தியால் நிரம்பியது" என்று இந்திய தூதரகம் ட்விட்டரில் கூறியுள்ளது. ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள அதே நகரத்தில் தான் மெக்சிகோவின் முதல் ஹனுமான் கோவிலும் உள்ளது.