ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஏஜென்டை உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (யுபி ஏடிஎஸ்) போலீஸ் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சத்யேந்திர சிவால் 2021 ஆம் ஆண்டு முதல் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்டிருந்தார் என்பதும், ஹபூரைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், வெளிவிவகார அமைச்சகத்தின் MTS(மல்டி-டாஸ்கிங், ஸ்டாஃப்) ஆக பணியாற்றினார் என்பதும் தெரியவந்துள்ளது.
மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒரு உளவாளி செயல்படுவதாக பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து செயல்பட்ட உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (யுபி ஏடிஎஸ்), சந்தேகத்தின் பேரில் சத்யேந்திர சிவாலை விசாரித்தது.
உத்தர பிரதேசம்
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
ஆனால், முதலில் அவரது பதில்கள் திருப்தி அளிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதனால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
அதனையடுத்து, அவர் கடைசியாக உளவு பார்த்ததாக ஒப்புக்கொண்டார் என்றும், அதன் பிறகு போலீசார் அவரை கைது செய்தனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் அதன் அன்றாட செயல்பாடுகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு சத்யேந்திர சிவால் லஞ்சம் கொடுத்த விவரங்களும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய தூதரகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் பற்றிய முக்கியமான மற்றும் ரகசிய தகவல்களை ஐஎஸ்ஐயிடம் வழங்கியதையும் சத்யேந்திர சிவால் ஒப்புக்கொண்டுள்ளார்.