Page Loader
பாரிஸ் நகரத்தில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 3 பேர் காயம் 

பாரிஸ் நகரத்தில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 3 பேர் காயம் 

எழுதியவர் Sindhuja SM
Feb 03, 2024
02:48 pm

செய்தி முன்னோட்டம்

பாரிஸ் நகரத்தில் உள்ள பாரிஸ் கேர் டி லியோன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று கத்திக்குத்துத் தாக்குதலால் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. மேலும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. கைது செய்யப்பட்ட நபர், காலை 8:00 மணியளவில்(0700 GMT) கத்தி குத்து தாக்குதல் நடத்தினார். தாக்குதல் நடந்த ரயில் நிலையம் மிக முக்கியமான பாரிஸ் ரயில் நிலையமாகும். உள்நாட்டு ரயில்கள், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலிக்கு செல்லும் ரயில்கள் அந்த ரயில் நிலையத்தில் இருந்து இயங்குகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

பாரிஸ் கேர் டி லியோன் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து