Page Loader
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர்

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் புதையுண்டனர்

எழுதியவர் Sindhuja SM
Jan 22, 2024
09:47 am

செய்தி முன்னோட்டம்

தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால்ல் 47 பேர் புதையுண்டனர். மேலும் 500 பேர் வெளியேற்றப்பட்டனர். யுனான் மாகாணத்தின் டாங்ஃபாங் நகரில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் இன்று காலை 6 மணிக்கு முன் இந்த பேரழிவு நடந்துள்ளது. 18 தனித்தனி வீடுகளில் சிக்கியவர்களை கண்டறிய மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக சீனாவின் விளம்பரத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. நிலச்சரிவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அதிக பனியால் இது ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ட்ஜ்கவாஸ் 

சீனாவின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கடந்த மாதம், கன்சு மற்றும் கிங்காய் மாகாணத்திற்கு இடையே உள்ள தொலைதூரப் பகுதியில் சீனாவின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது மாதத்திற்குள் இந்த பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது 149 பேர் கொல்லப்பட்டனர். வீடுகள் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டதுடன் கிங்காய் மாகாணத்தில் இரண்டு கிராமங்களை மூழ்கடித்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட மிக மோசமான அந்த நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 1,000 பேர் காயமடைந்தனர் மற்றும் 14,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன.