ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் உயிரிழப்புக்கு பின்னால் இருக்கும் மர்மம்: அவரது உடலில் காயங்கள் இருந்ததாக தகவல்
பிரபல ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும் அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சகருமான அலெக்ஸி நவல்னி உயிரிழந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆர்க்டிக்கில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் காயங்களின் அறிகுறிகளுடன் கண்டெடுக்கப்பட்டது என்று ஒரு ரஷ்ய செய்தித்தாள் அநாமதேய துணை மருத்துவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக உயிரிழந்தவர்களின் உடல்கள் நேரடியாக வெளிநாட்டு மருத்துவ பணியகத்திற்கு கொண்டு செல்லப்படும், ஆனால் அலெக்ஸி நவல்னியின் உடல் "சில காரணங்களுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது" என்று அந்த துணை மருத்துவர் கூறியுள்ளார். அவரது உடலில் உள்ள காயங்கள் வலிப்புத்தாக்கத்தின் போது அவரை யாரோ ஒருவர் அமுக்கி பிடித்திருந்ததை போல உள்ளது என்றும் அந்த மருத்துவர் கூறியுள்ளார்.
நவல்னியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் காட்டப்படவில்லை
நவல்னியின் உடல் பிணவறைக்கு வந்தபோது, அவரது தலை மற்றும் மார்பில் காயங்கள் இருந்ததாக ரஷ்ய செய்தித்தாளான நோவயா கெஸெட்டா ஐரோப்பா கூறியுள்ளது. "வழக்கமாக சிறையில் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் நேராக கிளாஸ்கோவா தெருவில் உள்ள தடயவியல் மருத்துவப் பணியகத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் இந்த வழக்கில், சில காரணங்களால் அது மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது," என்று நோவயா கெஸெட்டா அந்த துணை மருத்துவரை மேற்கோள் காட்டியுள்ளது. அவர் உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் அலெக்ஸி நவல்னியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் காட்டப்படவில்லை. அவரது தாயாருக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் முக்கிய அரசியல் எதிரியாக அலெக்ஸி நவல்னி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.