உலக செய்திகள்
கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: மற்றொரு இந்தியர் கைது
கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் நான்காவது சந்தேக நபர் கைது
ஜூன் 2023 இல் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் நான்காவது நபரைக் கைது செய்ததாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின்(BC) ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு(IHIT) அறிவித்துள்ளது.
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் பலி
அமெரிக்கா: இரண்டு மாதங்களுக்கு முன், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற ரிச்சர்ட் "ரிக்" ஸ்லேமேன் என்ற அமெரிக்கர் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது
ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், டொனால்ட் டிரம்புடனான தனது அந்தரங்க வாழ்க்கையின் விவரங்களை 'ஹஷ் மணி' வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டார்.
உலக வெப்பம் அதிகரிப்பு: உலகம் முழுவதும் ஏப்ரல் 2024இல் அதிகபட்ச வெப்பநிலை பதிவு
இன்று வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பின் புதிய அறிக்கையின்படி, இந்த ஏப்ரல் மாதம் காற்று மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட மிக அதிகமாகி சாதனை படைத்துள்ளது. எனவே, உலகம் முழுவதும் ஏப்ரல் 2024இல் அதிகபட்ச வெப்பநிலை பதிவுவாகி உள்ளது.
2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் கிழக்கு ரஃபாவில் உள்ள இரண்டு பகுதிகளைத் தாக்கியதாக காசா சிவில் பாதுகாப்பு மற்றும் உதவி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா
சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான புஜியன், கடந்த வாரம் தனது முதல் சோதனைக்காக கடலுக்குச் சென்றது.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி
கெரெம் ஷாலோம் எல்லைக் கடவையில் நடத்தப்பட்ட கொடிய ராக்கெட் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தை இஸ்ரேல் தாக்கியது.
போதைப்பொருள் கொடுத்து தன்னை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்திரேலிய எம்பி குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த தொழிற்கட்சி எம்பியான பிரிட்டானி லாகா, மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள யெப்பூன் நகரில் கடந்த வார இறுதியில் தனக்கு போதைப்பொருள் கொடுத்து யாரோ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்
காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ஹமாஸுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது இஸ்ரேல்.
காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடாவில் கைது
கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று இந்தியர்களைக் கைது செய்துள்ளதாக கனேடிய காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம்
அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பெரும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அக்டோபர் 2023 முதல் 31% இந்திய மசாலாக்கள் ஏற்றுமதியை நிராகரித்தது அமெரிக்கா
சால்மோனெல்லா மாசுபாட்டின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மஹாஷியன் டி ஹட்டி(MDH) பிரைவேட் லிமிடெடின் மசாலா பொருட்களின் ஏற்றுமதிகள் குறைந்துள்ளன.
காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார்.
துபாயில் திறக்கப்பட உள்ளது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்
கிட்டத்தட்ட 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 2.9 லட்சம் கோடி) மதிப்பிலான புதிய விமான நிலையத் திட்டத்தை இன்று அறிவித்தார் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்.
தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி
அமெரிக்கா: தெற்கு கரோலினாவின் கிரீன்வில்லி கவுண்டியில் உள்ள ஒரு பாலத்தின் மறுபக்கத்தில் உள்ள மரங்களில் மோதியதால், குஜராத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலியாகினர்.
ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி பஹ்ரைன் நாட்டில் உள்ள பிணவறையில் சடலமாக மீட்பு
ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகியின் சடலம் பஹ்ரைனில் உள்ள பிணவறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் என்ன?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளின் வடக்குப் பகுதிகளில் ஏப்ரல் 14 முதல் 15 வரை வரலாறு காணாத மழை பெய்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து மன்னர் சார்லஸின் இறுதிச் சடங்கு திட்டங்கள் அவசரமாக புதுப்பிக்கப்பட்டன
இங்கிலாந்து: மூன்றாம் சார்லஸ் மன்னரின் உடல்நலம் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின்(IDF) நெட்சா யெஹுடா பட்டாலியன் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெடிபொருட்களுடன் நடமாடிய சந்தேக நபர் கைது: பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை
வெடிபொருட்களுடன் சந்தேக நபர் நடமாடியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பாரிஸில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தை இன்று சுற்றி வளைத்த பிரெஞ்சு காவல்துறை, அந்த தூதுரகத்தை சோதனை செய்ய உள்ளது.
இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்
இஸ்ரேல் மீது ஈரான் 300 எறிகணைகளை வீசி தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குள், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது
கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.
பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக, பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன.
கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை
கனடாவின் தெற்கு வான்கூவரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன?
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரித்து வருவதால், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று கவலை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா
சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நேற்று நடத்தியது.
இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது ஈரான்: போர் பதட்டம் அதிகரிப்பு
சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை இன்று நடத்தியது.
இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல்
மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
காசாவில் இராணுவ நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், மற்ற தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எழுந்துள்ளது.
கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ
கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்
ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான நிறுவனம் வியாழனன்று ஈரானுக்கான விமானங்களின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தது.
வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு: அந்நாட்டு கோடீஸ்வரருக்கு மரண தண்டனை அறிவிப்பு
வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு தொடர்பாக, வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரான ட்ரூங் மை லானுக்கு, ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி
இருதரப்பிலும் உள்ள "பிரச்சனைகளை" தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளும் ஒரு முக்கியமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்
கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக சமீபத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன.