Page Loader
கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை

கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை

எழுதியவர் Sindhuja SM
Apr 14, 2024
01:46 pm

செய்தி முன்னோட்டம்

கனடாவின் தெற்கு வான்கூவரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததை அடுத்து, துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்த சிராக் அன்டில்(24) என்பவர் ஒரு வாகனத்திற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்று வான்கூவர் காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு 11 மணியளவில் கிழக்கு 55வது அவென்யூ மற்றும் மெயின் ஸ்ட்ரீட்டிற்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். குடியிருப்பாளர்களுக்கு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அதை அடுத்து, சிராக் அன்டில்(24) அப்பகுதியில் வாகனத்திற்குள் இறந்து கிடக்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். யாரும் கைது செய்யப்படவில்லை, விசாரணை நடந்து வருகிறது" என்று போலீசார் தெரிவித்தனர்.

கனடா

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு உதவிமாறு கோரிக்கை

காங்கிரஸ் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத் தலைவர் வருண் சௌத்ரி, வெளியுறவு அமைச்சகத்திடம், அந்த மாணவரின் குடும்பத்திற்கு உதவிமாறு கோரிக்கை விடுத்துள்ளார். "கனடாவின் வான்கூவரில் நடந்த இந்திய மாணவர் சிராக் அண்டிலின் கொலை தொடர்பாக அவசர கவனம் தேவை. விசாரணையின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து நீதி விரைவாக வழங்கப்படுவதை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று சௌத்ரி கூறியுள்ளார். "கூடுதலாக, இந்த கடினமான நேரத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்க அமைச்சகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றும் அவர் கூறியுள்ளார்.