கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்
கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக சமீபத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இது குறித்து ஒரு பொது விசாரணை நடத்தப்பட்டது. அந்த பொது விசாரணையில் சாட்சியமளித்த கனேடிய அதிகாரிகள், கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டது தொடர்பான குற்றசாட்டுகள் அனைத்தும் மறுத்துள்ளனர். 2021 தேர்தலை மேற்பார்வையிடும் மூத்த அதிகாரிகள் அந்த பொது விசாரணையில் சாட்சியமளிக்கும் போது இதனை கூறினர். தேர்தல் செயல்முறைகளில் இந்திய தலையீடு குறித்த எந்த அறிகுறியும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது, முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் மார்டா மோர்கன் மற்றும் முன்னாள் கேபினட் செயலர் ஜானிஸ் சாரெட் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள், 2021 தேர்தலில் இந்தியா தலையிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சாட்சியம் அளித்தனர்.
இந்தியா, சீனா உட்பட பல வெளிநாட்டு தலையீடுகள் இருந்ததாக குற்றச்சாட்டு
கனேடிய பிரச்சாரங்களுக்கு இந்தியாவில் இருந்து நிதியுதவி கிடைத்தது தொடர்பாக பேசிய குழு உறுப்பினர்கள், அது சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டனர். அதனால், கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகள் வலுவிழந்தன. கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா, சீனா உட்பட பல வெளிநாட்டு தலையீடுகள் இருந்ததாக சமீபத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்த பொது விசாரணை நடதபட்டது. அந்த விசாரணையில் பேசிய முக்கிய கனேடிய அதிகாரிகள் இந்தியா மீதமான குற்றசாட்டுகளை மறுத்துள்ளனர். 2021 தேர்தலின் போது இந்தியா தேர்தல் செயல்முறையில் தலையிட்டதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.