தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா: தெற்கு கரோலினாவின் கிரீன்வில்லி கவுண்டியில் உள்ள ஒரு பாலத்தின் மறுபக்கத்தில் உள்ள மரங்களில் மோதியதால், குஜராத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பலியாகினர்.
முதலில், அவர்களது SUV சாலையை விட்டு விலகி பாலத்தில் இருந்து கவிழ்ந்தது. அதன் பிறகு அந்த கார் மரங்களில் சிக்கி பல துண்டுகளாக நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
I-85 இல் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த SUV, மரங்களின் மீது மோதுவதற்கு முன், வந்த வேகத்தில் குறைந்தபட்சம் 20 அடி வரை காற்றில் பறந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா
ஒருவர் உயிர் பிழைத்தார்
"குறிப்பிடப்பட்ட வேக வரம்பை விட அவர்கள் அதிக வேகத்துடன் பயணித்திருக்கின்றனர்" என்று தலைமை துணை கரோனர் எல்லிஸ் கூறியுள்ளார்.
4-6 வழித்தடங்களை தாண்டி இரு வாகனம் சுமார் 20 அடி தூரத்திற்கு மரங்களில் மோதுவதை காண்பது மிக அரிதான ஒரு விஷயம். அப்படி நடந்திராதென்றால், அவர்கள் எவ்வளவு வேகத்தில் வந்திருக்க வேண்டும்." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
விபத்தைத் தொடர்ந்து, உள்ளூர் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவுகள், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் மற்றும் கிரீன்வில்லி கவுண்டியில் இருந்து பல EMS பிரிவுகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
உயிர் பிழைத்த ஒரே ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.