உலக செய்திகள்
பனிப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய கைதி பரிமாற்றம்; ரஷ்ய உளவாளிகளின் சுவாரஸ்ய பின்னணி
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இருபத்தி நான்கு கைதிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) விடுவிக்கப்பட்டனர்.
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கருவியாக மெட்டா AI மாறும்: மார்க் ஸூக்கர்பெர்க்
மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகளாவிய IT செயலிழப்பு: $500M இழப்புக்கு CrowdStrike, மைக்ரோசாப்ட் காரணம் என டெல்டா குற்றச்சாட்டு
ஜூலை மாதம் உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பைத் தொடர்ந்து, டெல்டா ஏர் லைன்ஸ் குறிப்பிடத்தக்க நிதி பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
அமெரிக்காவின் மிசிசிப்பியில் பெரும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 16 பேர் காயம்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.
வரலாற்று வாக்கெடுப்புக்குப் பிறகு 200 'இனவெறி' தாவரங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன
ஒரு முக்கிய முடிவில், உலகெங்கிலும் உள்ள தாவரவியலாளர்கள் 200க்கும் மேற்பட்ட தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் ஆல்கே இனங்களின் 'இன அவதூறுகளை' அகற்றுவதற்கு வாக்களித்துள்ளனர்.
ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து: 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம்
திங்களன்று ஓமன் கடற்கரையில் ஒரு எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் கொண்ட கப்பல் பணியாளர்களை காணவில்லை.
வேண்டுமென்றே பணியாளரின் முகத்தில் இருமிய முதலாளி ரூ.23 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென உத்தரவு
கொரோனா தொற்றின் போது வேண்டுமென்றே தனது பணியாளரின் முகத்தில் இருமியதற்காக ஒரு முதலாளிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.
வீடியோ: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட தருணம்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.
2028க்குள் உலகம் பல மில்லியனர்களை பார்க்கபோகிறது: UBS அறிக்கை
நிதி நிறுவனமான UBS இன் புதிய அறிக்கைப்படி, 2028 ஆம் ஆண்டளவில் மில்லியனர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உலகளாவிய அதிகரிப்பை கணித்துள்ளது.
அறியப்படாத சிப்பாயின் கல்லறைக்கு செல்கிறார் பிரதமர் மோடி: மோடியின் ரஷ்ய பயணத் திட்டத்தின் விவரங்கள்
22-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பயணத்தின் போது மாஸ்கோவில் உள்ள அறியப்படாத ராணுவ வீரரின் கல்லறையில் மலர்வளையம் வைக்க உள்ளார்.
பாகிஸ்தான்: சிகிச்சை அளிக்க முடியாமல், பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை
பாகிஸ்தான்: 15 நாட்களே ஆன தனது பிறந்த மகளை உயிருடன் புதைத்த கொடூரமான செயலுக்காக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ARY நியூஸ் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து எம்பி ஆனார் கேரளாவைச் சேர்ந்த மனநல செவிலியர் சோஜன் ஜோசப்
22 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த தேசிய சுகாதார சேவையின் (NHS) மனநல செவிலியரான சோஜன் ஜோசப், இந்த வாரம் நடைபெற்ற UK பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேபாளத்தில் பயங்கர கனமழை, வெள்ளம் தொடர்வதால் 47 பேர் பலி
நேபாளம் கடுமையான பருவமழை தொடர்பான பேரழிவுகளை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்குள் நேபாளத்தில் 47 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஈரானிய சீர்திருத்தவாதியான பெசெஷ்கியன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்
ஈரானின் சீர்திருத்தவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று நடந்த அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி தலைவரான சயீத் ஜலிலியை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
41 ஆண்டுகளுக்கு பிறகு வியன்னாவுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் ஆனார் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஆஸ்திரியா செல்கிறார். இதனையடுத்து, 41 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டுக்கு பயணம் செய்யும் முதல் இந்தியத் பிரதமர் என்ற பெயர் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
டிரம்புடனான விவாதத்தின் போது தான் 'தூங்கிவிட்டதாக' ஒப்புக்கொண்டார் அதிபர் பைடன்
கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தல் விவாதத்தின் போது தான் "கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக" ஒப்புக்கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தியது கிரீஸ்
உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆறு நாள் வேலை வாரத்தை கிரீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
சிகாகோவைச் சேர்ந்த சுகாதார நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் மோசடி: 2 இந்தியர்களுக்கு தண்டனை விதிப்பு
அமெரிக்கா: சிகாகோவை தளமாகக் கொண்ட ஹெல்த் டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளான இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், கடன் வழங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் குறிவைத்து மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இது AUD 710($473) இலிருந்து AUD 1,600 ($1,068) ஆக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இந்து கோவில் கட்ட வேண்டும் என்று அங்குள்ள இந்திய சமூகம் கோரிக்கை
ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகம் மத காரணத்திற்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
K-pop இசையை கேட்டதற்காக 22 வயது இளைஞரை தூக்கிலிட்டது வட கொரியா
K-pop இசையை கேட்டதற்காகவும் பகிர்ந்ததற்காகவும் 22 வயது இளைஞருக்கு வட கொரியா அதிகாரிகள் பகிரங்கமாக மரண தண்டனை விதித்துள்ளனர் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் பல இடங்களை குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய பெண்கள்: 18 பேர் பலி
ஆப்பிரிக்கா: நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் சனிக்கிழமை(உள்ளூர் நேரப்படி) பெண் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காட்டி செக்டரில் இருக்கும் சர்வதேச எல்லையில் எந்த ஒரு காரணமும் இல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய போஸ்ட் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்தியா டுடே டிவி செய்தியை வெளியிட்டுள்ளது.
போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை
போயிங் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீதித்துறை (DOJ) கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி
ரஷ்யாவின் தெற்கு குடியரசின் தாகெஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர், ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் மற்றும் பொதுமக்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலினால் 42 பாலத்தீனர்கள் பலி: போரை நிறுத்த வலியுறுத்தி இஸ்ரேல் மக்கள் போராட்டம்
சனிக்கிழமையன்று காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
உலகம்: வேலையாட்களை சுரண்டியதற்காக கோடீஸ்வரர் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு சுவிஸ் நீதிமன்றம் நான்கு முதல் 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குவைத் கட்டிட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 15,000 டாலர்கள் நிவாரணம்
குவைத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதி நிஜ்ஜாரின் நினைவு நாளுக்கு மௌன அஞ்சலி செலுத்திய கனடா நாடாளுமன்றம்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் ஓராண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் கனடா நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு இன்று தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடந்தது.
பன்னுன் கொலை சதி வழக்கு: தான் குற்றமற்றவர் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிகில் குப்தா வாதம்
அமெரிக்க மண்ணில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் திங்களன்று தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார்.
2023ஆம் ஆண்டில் அணு ஆயுதங்களுக்காக 91.4 பில்லியன் டாலர் செலவழித்த உலக நாடுகள்
ஜூன் 17, 2024 அன்று அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சாரத்தின் (ICAN ) அறிக்கையின்படி, உலகின் முக்கிய சக்திகள் தங்கள் அணு ஆயுத செலவினங்களை 13% அதிகரித்துள்ளன.
தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம்
சனிக்கிழமை மாலை(உள்ளூர் நேரப்படி) டெக்சாஸின் ரவுண்ட் ராக்கில் உள்ள பூங்கா ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம்
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே உள்ள நீர் பூங்காவில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக பொது மக்களை சந்தித்தார் இளவரசி கேட் மிடில்டன்
லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ட்ரூப்பிங் தி கலர் 2024 நிகழ்வில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். கடந்த ஆறு மாதங்களில் அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்
இத்தாலியின் அபுலியா பகுதியில் நேற்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்தார்.
பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட மரணங்கள் 'தேவையான தியாகங்கள்' என்று ஹமாஸ் தலைவர் கூறியதாக தகவல்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட காசாவில் உள்ள ஹமாஸின் உயர் அதிகாரி, பாலஸ்தீனிய குடிமக்களின் மரணத்தை "தேவையான தியாகங்கள்" என்று தான் கருதுவதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்
புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள், தமிழர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மலாவியின் துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் விமான விபத்தில் பலி
மலாவியின் துணை ஜனாதிபதி டாக்டர் சௌலோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்
சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.