அமெரிக்காவின் மிசிசிப்பியில் பெரும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 16 பேர் காயம்
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். இண்டினோலா நகரில் உள்ள இரவு விடுதிக்கு அருகே யாரோ ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். "பலர் வெளியே நின்று கொண்டிருக்கும் போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்" என்று இந்தியனோலா காவல்துறைத் தலைவர் ரொனால்ட் சாம்ப்சன் உள்ளூர் செய்தித்தாளிடம் தெரிவித்தார். துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது என்பதற்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், இதுவரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. டஜன் கணக்கான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறியுள்ளன.