வேண்டுமென்றே பணியாளரின் முகத்தில் இருமிய முதலாளி ரூ.23 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென உத்தரவு
கொரோனா தொற்றின் போது வேண்டுமென்றே தனது பணியாளரின் முகத்தில் இருமியதற்காக ஒரு முதலாளிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அந்த முதலாளி தனது முன்னாள் ஊழியருக்கு £26,000 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. £ 26,000 என்பது கிட்டத்தட்ட 24 லட்ச ரூபாயாகும். கெவின் டேவிஸ் என்பவர் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியரை கேலி செய்து மிரட்டியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கெவின் டேவிஸ்(63) என்பவர் பிரபல வேல்ஸ் ரக்பி வீராங்கனையான கரேத் டேவிஸின் தந்தை ஆவர். இந்த சம்பவம் வேல்ஸ் நாட்டில் நடந்துள்ளது. அவரது நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒரு பெண் ஊழியருக்கு சோரியாடிக் ஆர்த்ரிடிஸ் மற்றும் ஆட்டோ இம்யூன் நிலை ஆகிய நோய்கள் இருந்திருக்கிறது
நோய்வாய்ப்பட்ட பெண் மீது வேண்டுமென்றே இருமிய முதலாளி
அதனால் கவலை அடைந்த அந்த பெண், கோவிட் தொற்றுநோய் குறையும் வரை காவ்டர் கார்ஸில் உள்ள தனது சக ஊழியர்களை தன்னிடமிருந்து சமூக ரீதியாக விலகி இருக்குமாறு கேட்டு கொண்டார். அந்த பெண்ணின் அறிந்த அவரது முதலாளி வேண்டுமென்றே அந்த பெண்ணின் முகத்தில் இருமி அவரை கேலி செய்திருக்கிறார். அந்த சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கு அந்த பெண் தனது வேலை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் மன உழைச்சல் அடைந்த அந்த பெண் தனது முதலாளிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 3 வருடங்களுக்கு பிறகு அந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு 26,438.84 பவுண்டுகள் நஷ்டஈடுவழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.