
வீடியோ: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்ட தருணம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.
இந்த சம்பவத்தால் அவரது வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்த டிரம்ப் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், முகத்தில் ரத்தத்துடன் அவர் பேரணி மேடையில் இருந்து வெளியேறியற்றபட்டதாகவும் ரகசிய சேவை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, டிரம்ப்பை குறிவைத்து தாக்கியவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அதில் குற்றவாளியும் பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொரு பார்வையாளர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
"எனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா துளையிட்டது" என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சம்பவத்தின் போது பதிவான வீடியோ
“Many Men” by Donald Trump 🇺🇸✊ pic.twitter.com/YFpfSft6zU
— Tour Golf (@PGATUOR) July 13, 2024