நைஜீரியாவில் பல இடங்களை குறிவைத்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்திய பெண்கள்: 18 பேர் பலி
ஆப்பிரிக்கா: நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் சனிக்கிழமை(உள்ளூர் நேரப்படி) பெண் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். குவோசா நகரில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் இஸ்லாமிய கிளர்ச்சிக்கு மத்தியில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. நைஜீரிய ராணுவம் தீவிரவாத குழுக்களை வலுவிழக்கச் செய்துள்ளனர். எனினும், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது அவர்கள் தொடர்ந்து கொடிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதி தீவிரமான காயம்
இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களும் உயிரிழநதுள்ளதாகபோர்னோ மாநில அவசர மேலாண்மை அமைப்பின் தலைவர் பார்கிண்டோ சைடு உறுதிப்படுத்தியுள்ளார். உட்புற உறுப்பு சேதம் முதல் மண்டை ஓடு மற்றும் மூட்டு முறிவு வரை பலருக்கு அதி தீவிரமான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் விவரித்தார். இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போர்னோ மாநிலம் நீண்ட காலமாக போகோ ஹராம் மற்றும் அதன் பிளவுக் குழுவான இஸ்லாமிய அரசு ஆகியவற்றின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த போராளிக் குழுக்கள் பரந்த கிராமப் பகுதி முழுவதும் செயல்பட்டு வருகின்றன.