ஈரானிய சீர்திருத்தவாதியான பெசெஷ்கியன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்
ஈரானின் சீர்திருத்தவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியன் சனிக்கிழமையன்று நடந்த அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி தலைவரான சயீத் ஜலிலியை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள சுமார் 30 மில்லியன் வாக்குகளில், பெசெஷ்கியன் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளையும், ஜலிலி 13 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றனர். தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மொஹ்சென் எஸ்லாமி, வாக்காளர்களின் எண்ணிக்கை 49.8 சதவீதமாக இருந்தது என்று கூறினார். ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் தீவிர வலதுசாரி தலைவர் இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, ஈரானில் தேர்தல் நடத்தப்ட்டது.
எதிர்பார்த்ததை விட மிக குறைவாக பாதிவாகிய வாக்குகள்
கடந்த வாரம் நடத்தப்பட்ட முதல் சுற்று ஈரான் தேர்தலின் போது, வரலாற்றிலேயே மிக குறைவான வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, இரண்டாவது தேர்தலில் அதிகம் பேர் வாக்குப்பதி செய்ய வேண்டும் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். முதல் சுற்றில் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததாகவும், ஆனால் இது சமூக அமைப்புக்கு எதிரான செயல் அல்ல என்றும் அவர் கூறினார். காசா யுத்தம், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடனான மோதல் மற்றும் ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள், பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் மீதான உள்நாட்டு அதிருப்தி ஆகியவற்றால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் தேர்தல் நடைபெற்றுள்ளது.