ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து: 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம்
செய்தி முன்னோட்டம்
திங்களன்று ஓமன் கடற்கரையில் ஒரு எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் கொண்ட கப்பல் பணியாளர்களை காணவில்லை.
அந்த எண்ணெய் டேங்கர் முழுவதுமாக காணாமல் போனதாக சுல்தானகத்தின் கடல்சார் பாதுகாப்பு மையம் (எம்எஸ்சி) தெரிவித்துள்ளது.
மற்ற மூன்று பணியாளர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர்.
கொமொரோஸ் கொடியுடன் சென்ற அந்த எண்ணெய் டேங்கர் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் டுக்ம் துறைமுகத்திற்கு அருகில் கவிழ்ந்தது.
டுக்ம் துறைமுகம் ஓமானின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது, சுல்தானட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களுக்கு அருகில் உள்ளது
உலகம்
அந்த கப்பலின் பெயர் பிரஸ்டீஜ் பால்கன்
டுக்ம் துறைமுகம் ஓமானின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. சுல்தானட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களுக்கு அருகில் இது உள்ளது.
இதில் ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளது. டுக்மின் பரந்த தொழில்துறை மண்டலத்தின் இது ஒரு பகுதியாகும். ஓமானின் மிகப்பெரிய ஒற்றை பொருளாதார திட்டமாகும் இது இருக்கிறது.
தற்போது அந்த கப்பல் பெயர் பிரஸ்டீஜ் பால்கன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
"கப்பலின் பணியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கடவில்லை," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து இணையதளமான marinetraffic.com படி, எண்ணெய் டேங்கர் ஏமன் துறைமுக நகரமான ஏடனை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த கப்பல் 2007 இல் கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு டேங்கர்