குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 40 இந்தியர்கள் பலி, 30 பேர் காயம்
புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள், தமிழர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குவைத்தின் தெற்கு அஹ்மதி மாகாணத்தில் உள்ள மங்காப் நகரில் இருக்கும் கட்டிடத்தில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற போது கட்டிடத்தில் சிக்கிய பலர் பலத்த காயம் அடைந்தனர்.
உயிரிந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை
இந்த தீ விபத்தில் குறைந்தது 30 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அதான் மருத்துவமனை, அல்-ஃபர்வானியா மருத்துவமனை, அல்-அமிரி மருத்துவமனை, முபாரக் மருத்துவமனை மற்றும் ஜாபர் அல்-அஹமது மருத்துவமனையில் தீயணைப்புப் படை மற்றும் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையில், குவைத்தின் தெற்கு மங்காப் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 35 பேர் பலியாகியுள்ளதாக அரசு நடத்தும் குவைத் செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 41 பேர் கொல்லப்பட்டதாக குவைத் துணைப் பிரதமர் கூறி இருக்கிறார். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து மலையாளிகள் உள்ளனர் என்று மனோரமா ஊடகம் தெரிவித்துள்ளது.