தீடிரென்று ஒரு நபர் டெக்ஸாஸில் துப்பாக்கி சூடு நடத்தியதால் இருவர் பலி, பலர் காயம்
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை மாலை(உள்ளூர் நேரப்படி) டெக்சாஸின் ரவுண்ட் ராக்கில் உள்ள பூங்கா ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஜூன்டீன்த் திருவிழாவின் போது அந்த பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஆறு பேர் காயமடைந்ததாக CNN தெரிவித்துள்ளது.
அவர்கள் அனைவருக்கும் "சாத்தியமான காயங்கள்" இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓல்ட் செட்டிலர்ஸ் பூங்காவில் இரவு 11 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக ரவுண்ட் ராக் போலீஸ் தலைவர் ஆலன் பேங்க்ஸ் தெரிவித்தார்.
ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தி, பலரைத் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா
அமெரிக்காவின் மிச்சிகனில் நடந்த துப்பாக்கி சூடு
நான்கு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவ மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போதைக்கு சந்தேகத்திற்கு இடமானவர்கள் யாரும் இல்லை. சந்தேக நபர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே இருக்கும் நீர் பூங்காவில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் காயமடைந்தனர்.
இதுவும், அமெரிக்க நேரப்படி, சனிக்கிழமை மாலை தான் நடந்திருக்கிறது.
மிச்சிகனில் துப்பாக்கி சூடு நடத்திய நபர், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வளைத்து பிடிக்கப்பட்டார்.