பாகிஸ்தான்: சிகிச்சை அளிக்க முடியாமல், பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான்: 15 நாட்களே ஆன தனது பிறந்த மகளை உயிருடன் புதைத்த கொடூரமான செயலுக்காக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ARY நியூஸ் தெரிவித்துள்ளது.
தய்யாப் என அடையாளம் காணப்பட்ட அந்த தந்தை, இந்த கொடூர செயலை ஒப்புக்கொண்டார் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நிதி நெருக்கடிகள் காரணமாக அவரது கைக்குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை.
அதனால், அவர் தனது பிறந்த குழந்தையை ஒரு சாக்குப்பையில் வைத்து உயிருடன் புதைத்துவிட்டார்.
இந்த விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தயாப் மீது முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, பிரேத பரிசோதனை நடைமுறைக்காக குழந்தையின் கல்லறை தடயவியல் பரிசோதனைக்காக திறக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான்
பணிபெண்ணை நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்திய தம்பதி
இதற்கிடையில், லாகூரில் உள்ள டிஃபென்ஸ் பி பகுதியில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.
அங்கு வசித்து வரும் ஒரு கணவனும் மனைவியும் தங்களது வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது பெண்ணை கடுமையாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த பணிப்பெண்ணின் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து, சட்ட அமலாக்கப் பிரிவினர் உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட ஹாசம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக ஹசாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவியைக் கைது செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பணி பெண்ணை அவர்கள் அடித்ததாகவும், திருட்டு சந்தேகத்தின் பேரில் அவரை நிர்வாணமாக்கியதாகவும், இதனால் அந்த பெண்ணுக்கு கை மற்றும் மூக்கில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.