Page Loader
அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம் 

அமெரிக்காவில் உள்ள நீர் பூங்காவில் துப்பாக்கிச்சூடு: குழந்தைகள் உட்பட 10 பேர் காயம் 

எழுதியவர் Sindhuja SM
Jun 16, 2024
09:51 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே உள்ள நீர் பூங்காவில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளது. தலைமறைவாக இருந்த சந்தேக நபர், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வளைத்து பிடிக்கப்பட்டார். சந்தேக நபர் பயன்படுத்திய துப்பாக்கி சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள சிறுவர் நீர் பூங்காவில் துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்கா 

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் 

"ரோசெஸ்டர் ஹில்ஸில் உள்ள ஆபர்னில் இருக்கும் ஸ்பிளாஸ் பேடில் ஒரு சுறுசுறுப்பான துப்பாக்கிச் சூடு நடந்தது. சந்தேக நபர் அருகில் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே, மக்கள் அப்பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். ஏராளமான காயமடைந்தவர்கள் உள்ளனர்." என்று காவல்துறை முன்பு தெரிவித்திருந்தது. சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வீட்டிற்குள் மறைந்திருந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர். காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டதாக ஓக்லாண்ட் கவுண்டி ஷெரிப் மைக்கேல் பௌச்சார்ட் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் இதுவரை 215 பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.