வேலையாட்களை சுரண்டியதற்காக இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
செய்தி முன்னோட்டம்
உலகம்: வேலையாட்களை சுரண்டியதற்காக கோடீஸ்வரர் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு சுவிஸ் நீதிமன்றம் நான்கு முதல் 4.5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஜெனிவா ஏரியில் உள்ள இல்லத்தில் அவர்கள் தங்களது வீட்டு ஊழியர்களை சுரண்டியதாக குற்றமசாட்டப்பட்டுள்ளது.
ஆனால், மனித கடத்தல் குற்றச்சாட்டுகளை அவர்கள் செய்யவில்லை என்று நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கில் பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் ஆகியோருக்கு தலா 4.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களது மகன் அஜய் மற்றும் அஜயின் மனைவி நம்ரதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நான்கு குற்றவாளிகளும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம்
ஊழியர்களை இந்துஜா குடும்பம் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு
பிரிட்டனின் பெரிய பணக்காரர்களான இந்துஜா குடும்பம் அவர்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டை கைப்பற்றியதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அவர்களிடம் வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாத இந்தியர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்குவதை விட அவர்கள் தங்கள் நாய்க்கு அதிக செலவு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், அந்த ஊழியர்களுக்கு சுவிஸ் பிராங்குகளில் அல்லாமல் ரூபாய்களில் ஊதியம் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
அந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் வீட்டை விட்டு வெளியேற விடாமல் தொழிலாளர்களை தடுத்ததாகவும், அவர்களை நீண்ட நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.