Page Loader
இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது ஈரான்: போர் பதட்டம் அதிகரிப்பு 

இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது ஈரான்: போர் பதட்டம் அதிகரிப்பு 

எழுதியவர் Sindhuja SM
Apr 14, 2024
08:46 am

செய்தி முன்னோட்டம்

சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை இன்று நடத்தியது. ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் சேர்ந்து இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியதால் இஸ்ரேல் மீது 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன. "ஈரான் அரசு 200 க்கும் மேற்பட்ட கொலையாளி ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகளைஎங்கள் மீது ஏவியது" என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததது.

ஈரான் 

'தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டது': ஈரான்

இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது. இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று ஈரான் கூறியுள்ளது. டஜன் கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேலிய பிரதேசத்தை நெருங்கி வருவது அடையாளம் காணப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு முன்பே தகர்க்கப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவையும் வழங்க உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.