காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ஹமாஸுக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது இஸ்ரேல்.
அப்படி இல்லையெனில் இஸ்ரேல், ரஃபா பகுதி மீது தாக்குதலை தொடங்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 முதல் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக எகிப்து கத்தார் மற்றும் அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் காஸாவில் உள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து விவாதிக்க எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்புவதாக ஹமாஸ் வெள்ளிக்கிழமை கூறியது.
இஸ்ரேல்
பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழு எகிப்துக்கு பயணம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிற மேற்கத்திய அதிகாரிகளின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரஃபாவில் ஒரு இராணுவ நடவடிக்கையை நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.
அது மேலும் பொதுமக்களின் மரணங்கள் மற்றும் மோசமான மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ் மற்றும் சிஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை எகிப்திய மத்தியஸ்தர்களை சந்திப்பார்கள் என்று எகிப்திய வட்டாரம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனிய இஸ்லாமியக் குழு, காசா போர் நிறுத்த உடன்படிக்கைக்கான சமீபத்திய முன்மொழிவை ஆய்வு செய்த பின்னர், அதன் தூதுக்குழு கெய்ரோவிற்கு நல்ல முடிவுடன் பயணிப்பதாகக் கூறியது.