பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக, பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன. அப்படிப்பட்ட படங்களை உருவாக்கிவிட்டு பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், புதிய சட்டத்தின் கீழ் வழக்கு மற்றும் வரம்பற்ற அபராதம் விதிக்கப்படும் என்று நீதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அப்படிப்பட்ட படங்களை உருவாக்கிவிட்டு பகிரவும் செய்தால், சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியால், டீப்ஃபேக் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதும் பரப்புவதும் அதிகரித்தன. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒரு தேசிய அச்சுறுத்தலாக UK வகைப்படுத்தியுள்ளது.
"டீப்ஃபேக் படங்களை உருவாக்குவது ஒழுக்கக்கேடானது": இங்கிலாந்து அரசாங்கம்
காவல்துறை அதைச் சமாளிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சட்டம் பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்த அல்லது துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறையைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. "டீப்ஃபேக் படங்களை உருவாக்குவது ஒழுக்கக்கேடானது என்பதையும், பெண்வெறுப்பு குற்றம் என்பதையும் இந்த புதிய சட்டம் கூறும்" என்று பாதுகாப்பிற்கான அமைச்சர் லாரா ஃபாரிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அனுமதியின்றி பாலியல் ரீதியிலான படங்களை பதிவு செய்வதையும் குற்றமாக்கும் புதிய கிரிமினல் சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.