Page Loader
'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி

'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Apr 11, 2024
12:40 pm

செய்தி முன்னோட்டம்

இருதரப்பிலும் உள்ள "பிரச்சனைகளை" தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளும் ஒரு முக்கியமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு முழு உலகிற்கும் முக்கியமானது என்று பிரதமர் மோடி அமெரிக்காவின் நியூஸ் வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார். "இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது இருதரப்பு தொடர்புகளில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து, நமது எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை," என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா 

இந்தியா-சீனா உறவுகள் சேதம் 

நேர்மறையான பேச்சுவார்த்தையின் மூலம் இரு அண்டை நாடுகளும் அதன் எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். "இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான மற்றும் அமைதியான உறவுகள் நமது இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் முக்கியமானது. இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம், அமைதியை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்." என்று நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது பிரதமர் மோடி கூறினார். 2020 ஆம் ஆண்டில் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் துருப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவுகள் கடுமையாக மோசமடைந்தன.