ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகி பஹ்ரைன் நாட்டில் உள்ள பிணவறையில் சடலமாக மீட்பு
ஒரு வருடத்திற்கு முன் காணாமல் போன தாய்லாந்து மாடல் அழகியின் சடலம் பஹ்ரைனில் உள்ள பிணவறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 31 வயதான கைகன் கென்னகம் என்பவர் வேலை வற்றிய பிறகு தனது நாட்டிற்கு வெளியே வாய்ப்புகளைத் தேடினார். அவருக்கு பஹ்ரைனில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை கிடைத்தது. அதனையடுத்து, வடக்கு தாய்லாந்தில் உள்ள தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றார். அவர் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவர் இடுகையிட்டு வந்தார். மேலும், தனது பஹ்ரைன் காதலனை சந்தித்து வாழத் தொடங்கியதை தனது குடும்பத்தினரிடம் அவர் கூறி இருக்கிறார்.
ஏப்ரல் 2023 முதல் கைகனை தொடர்புகொள்ள முடியவில்லை
இந்நிலையில், அவர் திடீரென்று ஏப்ரல் 2023 இல் இருந்து இடுகையிடுவதை நிறுத்திவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் கவலைகுள்ளாகினர். அவர்களால் கைகனை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகனின் குடும்பத்தினர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தாய்லாந்து தூதரகத்தின் உதவியை நாடினர். ஆனால் தூதராகத்தால் கைகனை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏப்ரல் 18 அன்று, தாய்லாந்து தூதரகம், அடையாளம் தெரியாத தென்கிழக்கு ஆசிய பெண்ணின் உடல் சல்மானியா மருத்துவ வளாகத்தின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக கைகனின் குடும்பத்தினரிடம் தெரிவித்தது. கைகனின் காலில் இருந்த டாட்டூவை வைத்து அவர் அடையாளம் காணப்பட்டார். ஆல்கஹால் பாய்சனிங் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கைகனின் குடும்பத்தினர் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.