Page Loader
புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா 

புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா 

எழுதியவர் Sindhuja SM
May 06, 2024
04:27 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான புஜியன், கடந்த வாரம் தனது முதல் சோதனைக்காக கடலுக்குச் சென்றது. இது அமெரிக்காவின் உலகளாவிய இருப்புக்கு சீன கடற்படை சவால் விடும் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாகும். இந்த புதிய விமானம் தாங்கி கப்பலுக்கு புஜியன் என்ற மாகாணத்தின் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கட்டப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய, மிகவும் மேம்பட்ட சீன விமானம் தாங்கி கப்பல் இதுவாகும். புஜியன் கேரியர் ஷாங்காய் ஜியாங்னன் ஷிப்யார்டில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டது. மேலும், அந்த விமானம் தாங்கி கப்பலின் உந்துவிசை, மின் அமைப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை முதன்மையாக சோதிப்பதற்காக சோதனைகள் நடத்தப்பட்டன.

சீனா 

79,000 டன் எடை கொண்ட புஜியன் கேரியர் 

இந்த கப்பல் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் கடற்படை பணிகளில் ஈடுபடும். அதுவரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு சோதனைகள் நடத்தப்படும். சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மி நேவி(PLAN) உலகின் மிகப்பெரிய கடற்படையாகும். 370 க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை கொண்ட இந்த கடற்படை, அமெரிக்காவை மிஞ்சிய போர்கப்பலைகளை கொண்டது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. புஜியன் கேரியர் 79,000 டன் எடையுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த போர் ஜெட் ஏவுதள அமைப்பு, மின்காந்த விமான ஏவுதள அமைப்பு(EMALS) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தற்போது, ​​உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலாக இருக்கும் USS Gerald R Fordயில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே EMALS ஏவுதல் முறையையே இதுவும் பயன்படுத்துகிறது.