
துபாயில் திறக்கப்பட உள்ளது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்
செய்தி முன்னோட்டம்
கிட்டத்தட்ட 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ 2.9 லட்சம் கோடி) மதிப்பிலான புதிய விமான நிலையத் திட்டத்தை இன்று அறிவித்தார் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம்.
இந்த புதிய விமான நிலையம் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்பட உள்ளது.
ஐந்து இணையான ஓடுபாதைகள், 260 மில்லியன் பயணிகளை சமாளிக்கும் திறன் மற்றும் 400 விமான நுழைவாயில்களை இந்த விமான நிலையம் கொண்டிருக்கும்.
"நமது குழந்தைகளும் அவர்களின் குழந்தைகளும் தொடர்ச்சியாக மற்றும் நிலையாக வளர்ச்சியடைய இது உதவும் என்று ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ட்விட்டரில் கூறியுள்ளார்.
துபாய்
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்:
அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 260 மில்லியன் பயணிகளை சமாளிக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்.
இந்த துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் வரும் ஆண்டுகளில் புதிய பல பில்லியன் டாலர் திட்டத்திற்கு மாற்றப்படும். மேலும் இது தற்போதைய விமான நிலையத்தை விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும்.
இந்த விமான நிலையத்தில் 400 விமான வாயில்கள் மற்றும் ஐந்து இணை ஓடுபாதைகள் இருக்கும்.
துபாயின் விமானப் போக்குவரத்துத்துறை முதன்முறையாக புதிய விமானத் தொழில்நுட்பங்களைக் காணவுள்ளது.
துபாய் தெற்கில் உள்ள இந்த விமான நிலையத்தைச் சுற்றி ஒரு முழு நகரமும் கட்டப்படும்.
ஏனெனில் இந்த லட்சியத் திட்டம் ஒரு மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வீட்டுவசதியையுமஏற்படுத்தும்.