
2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் கிழக்கு ரஃபாவில் உள்ள இரண்டு பகுதிகளைத் தாக்கியதாக காசா சிவில் பாதுகாப்பு மற்றும் உதவி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.
ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து, கிழக்கு ரஃபா பகுதிகளில் தரைவழி தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் நேற்று அறிவித்தது.
எனவே, அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் கேட்டு கொண்டது.
இந்நிலையில், இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டது போலவே, கிழக்கு ரஃபாவில் உள்ள இரண்டு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
"இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பகுதிகள் காசா சர்வதேச விமான நிலையம், அல்-ஷுகா பகுதி, அபு ஹலாவா பகுதி, சலாஹெதின் தெரு பகுதி மற்றும் சலாம் சுற்றுப்புறம் ஆகியவற்றின் எல்லைக்கு அருகில் உள்ளன" என்று காசா சிவில் பாதுகாப்பு முகமை கூறியுள்ளது.
காசா
இந்த தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை
இஸ்ரேலிய இராணுவம் இது குறித்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ரஃபாவின் கிழக்குப் பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரெட் கிரசன்ட் சொசைட்டியின் அவசரகால நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த ஒசாமா அல்-கஹ்லூட் தெரிவித்துள்ளார்.
"இந்த தாக்குதல் வீடுகளை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் யாரும் பாதிக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.
அல்-சலாம், அல்-ஷுகா மற்றும் பிற பகுதிகளில் குண்டுவெடிப்பு தீவிரமாக இருந்தது என்று கிழக்கு ரஃபாவில் வசிக்கும் யாகூப் அல்-ஷேக் சலாமா(30) தெரிவித்துள்ளார்.
"குழந்தைகளும், பெண்களும் எங்கு செல்வது எனத் தெரியாமல் அச்சமடைந்துள்ளனர்,'' என்று அவர் கூறியுள்ளார்.