பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
காசாவில் இராணுவ நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், மற்ற தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எழுந்துள்ளது. சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்க இருப்பதாக ஈரான் சபதம் செய்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 1 தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இஸ்ரேல் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம்
இந்நிலையில், இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல் "தவிர்க்க முடியாதது" என்று ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். ஆறு மாதங்களுக்கு முன் ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் பெரும் போர் வெடித்தது. ஹமாஸ் என்பது ஈரான் ஆதரவு அமைப்பாகும். இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்ததாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் பென்டகன் இந்த தாக்குதலை இஸ்ரேல் செய்ததாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.