தரைத் தாக்குதலை முன்னிட்டு 1 லட்சம் பேரை ரஃபாவிலிருந்து வெளியேற்றுகிறது இஸ்ரேல்
கெரெம் ஷாலோம் எல்லைக் கடவையில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் நாதியதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் நேற்று, தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தைத் தாக்கியது. ஹமாஸின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவுகளை நிராகரித்தார். மேலும், ரஃபா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். எனவே, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) செவ்வாயன்று கிழக்கு ரஃபாவில் வசிக்கும் சுமார் 1 லட்சம் மக்களை வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்தது. காசாவிலுள்ள பாலஸ்தீனிய போராளிக் குழுவின் கடைசி கோட்டையான ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
பொதுமக்களை வெளியேற்ற இஸ்ரேல் நடவடிக்கை
எனவே, அப்பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டு கொண்டது. கிழக்கு ரஃபாவின் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களை அல்-மவாசி மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் உள்ள விரிவாக்கப்பட்ட மனிதாபிமான மண்டலத்திற்கு செல்லுமாறு இராணுவம் கேட்டுக் கொண்டது. ஹமாஸின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா போர்நிறுத்தத்திற்கான முன்மொழிவுகளை நிராகரித்தார். மேலும் ஹமாஸின் துருப்புக்களை அப்பகுதியில் இருந்து திரும்பப் பெறுவது மற்றும் போரை நிறுத்துவது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய எதிர்த்தாக்குதலின் விளைவாக குறைந்தது 19 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.