கனேடிய தேர்தலில் சீனா தலையிட முயன்றது ஆனால் முடிவுகளை அதன் தலையீட்டால் மாற்ற முடியவில்லை: ட்ரூடோ
கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக சமீபத்தில் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கான விசாரணை நடந்து வரும் நிலையில், மற்ற நாடுகளின் தலையீடு இருந்தபோதிலும், தேர்தல்கள் "சுதந்திரமாகவும் நியாயமாகவும்" நடந்ததாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். கடந்த இரண்டு கனேடியத் தேர்தல்களில் சீனா தலையிட முயன்றது, ஆனால் சீனாவால் முடிவுகளை மாற்ற முடியவில்லை. மேலும், சீனா ஒரு அரசியல் கட்சியை விட மற்றொரு அரசியல் கட்சியை விரும்புவது "சாத்தியமற்றது" என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 2019 மற்றும் 2021 கனேடிய தேர்தல்களில் சீனா தலையிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கும் அறிக்கைகளை விசாரிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதை தெரிவித்துள்ளார்.
இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்
2021 பிரச்சாரத்தின் போது கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவரான எரின் ஓ'டூல், சீன தலையீட்டினால் தனது கட்சி ஒன்பது இடங்களை இழந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இருப்பினும், 2019 மற்றும் 2021 தேர்தல்களில் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. அந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, "வெளிநாட்டு அரசுகள் தலையிட முயற்சித்தாலும், அந்தத் தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்பட்டன. அவை கனடியர்களால் தீர்மானிக்கப்பட்டன" என்று எரின் ஓ'டூல் கூறி இருந்தார். கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாகவும் சமீபத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன. இது குறித்து ஒரு பொது விசாரணை நடத்தப்பட்டது. அந்த பொது விசாரணையில் சாட்சியமளித்த கனேடிய அதிகாரிகள், கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டது தொடர்பான குற்றசாட்டுகள் அனைத்தும் மறுத்தனர்.