
ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது
செய்தி முன்னோட்டம்
ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ், டொனால்ட் டிரம்புடனான தனது அந்தரங்க வாழ்க்கையின் விவரங்களை 'ஹஷ் மணி' வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பகிர்ந்து கொண்டார்.
2006 ஆம் ஆண்டு லேக் தஹோ ஹோட்டலில் வைத்து தனக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே நடந்த பாலியல் சந்திப்பை அந்த ஆபாச நடிகை விவரித்துள்ளார்.
அவரது தெளிவான மற்றும் ஆபாசம் நிறைந்த சாட்சியம் தற்போது அமெரிக்கா முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில், அவரது தேர்தல் பிரச்சாரங்களை பாதிக்கும் வகையிலான இந்த சாட்சியம் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா
குற்றசாட்டுகளை மறுத்தார் டொனல்ட் டிரம்ப்
ஆனால், டொனல்ட் டிரம்ப் இந்த குற்றசாட்டுகளை மறுத்ததுடன், அப்படி ஒரு விஷயம் நடைபெறவே இல்லை என்று தெரிவித்திருந்தார்.
சரியாக தேர்தல் சமயத்தில் வெளியாகி இருக்கும் இந்த தகவல், அவரது செல்வாக்கையும் பிரச்சாரங்களையும் எப்படி பாதிக்கும் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.
பெண்களுடனான ட்ரம்பின் தொடர்புகள் நீதிமன்றத்தில் அவரை எப்படித் பாதிக்கின்றன என்பதற்கு இந்த சாட்சியமும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
கடந்த ஆண்டு, மன்ஹாட்டனில் உள்ள ஒரு கூட்டாட்சி நடுவர் மன்றம், 1990 களில் நியூயார்க் எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலை டிரம்ப் பாலியல் வன்கொடுமை செய்தததாக குற்றம்சாட்டியது. அந்த வழக்கில் கரோலுக்கு 83.3 மில்லியன் டாலர் நஷ்டஈடும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.