Page Loader
பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம்

பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம்

எழுதியவர் Sindhuja SM
Feb 05, 2024
11:42 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள சோட்வான் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். பிப்ரவரி 8 ஆம் தேதி பாகிஸ்தானில் தேசியத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்துள்ளது. "அதிகாலை 3 மணியளவில், தீவிரவாதிகள் ஸ்னைப்பர்கள் துப்பாக்கியால் காவல் நிலையத்தைத் தாக்கினர், பின்னர் கட்டிடத்திற்குள் நுழைந்தனர்" என்று பாகிஸ்தானின் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா பகுதி மற்றும் பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

பாகிஸ்தான் தாக்குதலில் 10 போலீசார் பலி