
சர்வதேச மாணவர்களை சேர்ப்பதற்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது ஒரு கனடா மாகாணம்
செய்தி முன்னோட்டம்
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா திங்களன்று(உள்ளூர் நேரம்) சர்வதேச மாணவர்களைச் சேர்க்க விரும்பும் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை பிப்ரவரி 2026 வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
அந்த மாகாணத்தில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகம் மற்றும் விக்டோரியா பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களில் கணிசமான இந்திய மாணவர் எண்ணிக்கை உள்ளது.
தனியார் பயிற்சி நிறுவனங்களில் குறைந்தபட்ச மொழித் தேவைகளை அறிமுகப்படுத்தவும், தொழிலாளர் சந்தை தேவைகள் மற்றும் பட்டப்படிப்புத் தரத்திற்கு உயர் தரங்களை அமைக்கவும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச மாணவர்கள் நேர்மையற்ற நிறுவனங்களால் சுரண்டப்படுவதை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடலம்வ்
சர்வதேச மாணவர் சேர்க்கையை 35% குறைத்தது கனடா
முதுகலை படிப்புகளின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்துவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நிலவும் வீட்டு நெருக்கடி பிரச்சனைகள், சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான வரம்பை குறைக்க செய்துள்ளது.
கனடாவில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால், வீடுகளின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. வீடுகளின் பற்றாக்குறையால் அவைகளின் விலை உயர்ந்துள்ளன.
அதனால், வீட்டு நெருக்கடி தொடர்பான அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில், ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் 2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச மாணவர் சேர்க்கையில் 35% குறைக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவித்தது.
எத்தனை சர்வதேச மாணவர்களை ஒவ்வொரு மாகாணத்திலும் அனுமதிக்க வேண்டும் என்பதை அந்தந்த மாகாணங்களே முடிவு செய்யும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் அதற்கு தடை விதித்துள்ளது.