'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா
செய்தி முன்னோட்டம்
இந்தியா-மியான்மர் எல்லையில் ஊடுருவலை தடுக்க விரைவில் வேலி அமைக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கூறியுள்ளார்.
தற்போது, விசா இல்லாமல் 16 கிமீ தூரம் வரை இந்தியாவுக்குள் நுழைவதற்கு மியான்மர்வாசிகளுக்கு அனுமதி இருக்கிறது. இந்தியர்களும் மியான்மர் எல்லைக்குள் 16 கிமீ தூரம் வரை செல்லலாம்.
இதற்கான இருதரப்பு ஒப்பந்தம் சுதந்திர இயக்கம் (FMR) என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருப்பது போல இருநாட்டுக்கும் இடையே வேலி அமைக்கப்பட்டால், விசா இல்லாமல் 16 கிமீ தூரம் வரை பரஸ்பர எல்லைக்குள் செல்ல அனுமதிக்கும் சுதந்திர இயக்கம்(FMR) விரைவில் முடிவுக்கு வரும்.
ட்ஜ்வ்ஸ்ல்
1,643 கிமீ நீளத்திற்கு நீளும் இந்தியா-மியான்மார் எல்லை
இன்று கவுகாத்தியில் நடந்த அசாம் போலீஸ் கமாண்டோக்களின் பாசிங் அவுட் அணிவகுப்பில் பேசிய அமித் ஷா, "மியன்மாருடனான இந்தியாவின் எல்லை விரைவில் வங்கதேச எல்லையைப் போல் பாதுகாக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
"மியான்மருடனான இந்தியாவின் திறந்த எல்லையை வேலி அமைத்து தடுக்க நரேந்திர மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்பதை அசாமில் உள்ள எனது நண்பர்களிடம் நான் கூற விரும்புகிறேன்," என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களை ஒட்டி 1,643 கிமீ நீளத்திற்கு இந்தியா-மியான்மார் எல்லை உள்ளது.
இந்நிலையில், மியான்மரில் நிலவும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக மியான்மர்வாசிகள் அடிக்கடி இந்தியாவிற்குள் நுழைந்து விடுகின்றனர். அதை தடுப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.