சிகாகோ அருகே 2 இடங்களில் 8 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளிக்கு வலை வீச்சு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் சிகாகோ புறநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு பதிவாகி இருக்கிறது. அந்த துப்பாக்கி சூட்டை நடத்திய ஒரு நபர் 8 பேரை சுட்டுக் கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிக்கு தெரிந்தவர்கள் என்று ஜோலியட் மற்றும் வில் கவுண்டி நகரின் போலீசார் தெரிவித்துள்ளனர்.
FBIஇன் பணிக்குழு மற்றும் உள்ளூர் காவல்துறை இணைந்து தப்பியோடிய குற்றவாளியை தேடி வருவதாக ஜோலியட் காவல்துறைத் தலைவர் வில்லியம் எவன்ஸ் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் சிகாகோ புறநகர் பகுதியில் 2 வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
ட்ஜக்வெ
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சுட்டு கொலை
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் வில் கவுண்டியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டார். ஜோலியட்டில் உள்ள இரண்டு வீடுகளில் மேலும் ஏழு பேர் திங்கள்கிழமை கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
குற்றவாளியும் அதே குடும்பத்தை சேர்ந்தவரா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், போலீசார் இது குறித்த தகவலை பகிந்து கொள்ள மறுத்துவிட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை ஜோலியட்டில் மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. அதில் ஒருவர் காயமடைந்தார். இந்த மூன்று துப்பாக்கி சூட்டுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.