Page Loader
ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம் 

ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம் 

எழுதியவர் Sindhuja SM
Feb 13, 2024
09:56 am

செய்தி முன்னோட்டம்

நாட்டிலுள்ள அனைத்து UNRWA அலுவலகங்களையும் இஸ்ரேல் மூட திட்டமிட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதேசங்களில் உள்ள UNRWA(பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம்) அலுவலகங்களை மூடுவதற்கான உடனடி உத்தரவை இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் யிட்சாக் கோல்ட்நாப் வெளியிட்டுள்ளார். UNRWA உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்துமாறு அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலுக்குள் குத்தகைக்கு விடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து அவற்றை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை நடத்தி 1,200 இஸ்ரேலியர்களை கொன்றது.

இஸ்ரேல்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஐநா ஏஜென்சி உதவியதாக குற்றச்சாட்டு

அதனை தொடர்ந்து, பாலஸ்தீன மக்கள் வாழும் காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் இதுவரை 24,000+ பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் மாதம் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது, காசாவில் உள்ள UNRWA உறுப்பினர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அந்த ஏஜென்சி தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. UNRWAவின் 13,000 ஊழியர்களில் 12 பேர் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு கடுமையான பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், இதனால் UNRWAக்கு வழங்கி வந்த நிதியுதவியை பல்வேறு உலக நாடுகள் நிறுத்தியுள்ளன. இதனால் தோராயமாக $450 மில்லியனை UNRWA இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.