உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை
வட-மத்திய ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
செங்கடலில் தாக்குதல்: 3 கப்பல்களை மூழ்கடித்து, 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கொன்றது அமெரிக்கா
செங்கடலில் மார்ஸ்க் கொள்கலன் கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் முறியடித்து.
திடீரென்று பதவி விலகுவதாக அறிவித்தார் டென்மார்க் ராணி
ஐரோப்பாவின் நீண்ட கால அரசாட்சி என்று பெயர் பெற்ற டென்மார்க்கின் ராணி மார்கிரேத் II, 52 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 14 ஆம் தேதி அரியணையில் இருந்து விலக உள்ளார்.
Happy New Year 2024- கிரிபதி மற்றும் நியூசிலாந்தில் புத்தாண்டை பட்டாசு வெடித்து வரவேற்ற மக்கள்
பசிபிக் நாடான கிரிபட்டி 2024 ஆம் ஆண்டு புத்தாண்டைக் முதல் நாடாக வரவேற்றுள்ளது. நாட்டின் மிகப்பெரிய தீவு, கிறிஸ்துமஸ் தீவு என்றும் அழைக்கப்படும் இது, இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு, புத்தாண்டுக்குள் காலடி எடுத்து வைத்தது.
உக்ரைன் போர்: கியேவ் மற்றும் கார்கிவ் மீது ரஷ்யா புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தகவல்
இரண்டு நாட்களாக ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த பெரிய வான்வெளி தாக்குதல்களைத் தொடர்ந்து, மீண்டும் ஆளில்லா ரஷ்ய விமானங்கள் உக்ரைனின் கியேவ் மற்றும் கார்கிவ் பகுதிகளை தாக்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு
காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதனால் கடுமையான சேதமோ உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
செங்கடலில் வர்த்தக கப்பலை குறிவைத்து ஹூதிகள் ஏவிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
செங்கடலில் வணிக கப்பலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய, ஹூதிகள் ஏவிய இரண்டு கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
H-1B விசா உட்பட பல்வேறு அமெரிக்கா விசாக்களுக்கான பிரீமியம் கட்டணம் 12% உயர்வு
அதிகமாக பயன்படுத்தப்படும் H-1B விசா உள்ளிட்ட பல்வேறு வகை விசாக்களுக்கு பிரீமியம் கட்டணத்தை 12% உயர்த்தியுள்ளதாக, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அண்மையில் தெரிவித்துள்ளது.
$5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம்
இந்திய வம்சாவளி தம்பதியினரும் அவர்களது மகளும், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள அவர்களது $5 மில்லியன் மாளிகையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 85: இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான்வெளி தாக்குதலில், 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, பலர் காயம்
வடக்கு மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பார்ட்டிக்குள் நுழைந்த மூன்று துப்பாக்கிதாரிகள் பார்ட்டியில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 26 பேர் காயமடைந்தனர்.
26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்?
26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதை நாடு கடத்த, இந்தியாவின் கோரிக்கை கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், அது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளது.
சீன உளவு பலூன் அதன் இருப்பிடத்தைத் தெரிவிக்க அமெரிக்க இணைய சேவையை பயன்படுத்தியது- தகவல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கூறப்பட்ட சீன பலூன், அந்நாட்டிற்கு தகவல்களை அனுப்ப அமெரிக்காவின் இணைய சேவையை பயன்படுத்திக் கொண்டதாக, அமெரிக்க அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா: புதிய பாதுகாப்பு அமைச்சராக முன்னாள் கடற்படைத் தளபதி டாங் ஜுன் நியமனம்
சீனா முன்னாள் கடற்படை தளபதி டாங் ஜுனை, கடந்த நான்கு மாதத்திற்கு முன் மாயமான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு வெள்ளிக்கிழமை நியமித்தது.
2023-ல் 75 மில்லியன் வரை உயர்ந்த உலகளாவிய மக்கள் தொகை
2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடையவிருக்கிறது. இந்த ஆண்டு உலகம் பல்வேறு மாற்றங்கள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை சந்தித்திருக்கிறது.
K-pop ரசிகர்கள், டிஜிட்டல் நோமட்ஸ் ஆகியோருக்கு தென் கொரியா விசாக்களை அறிமுகப்படுத்த உள்ளது
தற்போது தமிழக இளைஞர்கள் பலரையும் கவர்ந்துள்ளது K-நாடகங்கள், K-pop இசை மற்றும் கொரிய உணவு வகைகள்.
பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர்
காசா மற்றும் மேற்கு கரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வாருல் ஹக் கக்கார், அந்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதிப்பு
ஜனவரி 2021ல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறி, மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதித்துள்ளது.
போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின்
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் உடனான ஆலோசனைக்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் புடினை சந்திப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல்
காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர், கனடாவை விட்டு வெளியேறவில்லை எனவும், விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் தி குளோப் மற்றும் மெயில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்
தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலை நகர்ப்புற அகதிகள் முகாம்களுக்குள் விரிவு படுத்தியுள்ள இஸ்ரேல், மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
வீடியோ: வானில் இருந்து கீழே விழுந்து வெடித்த சீன ராக்கெட்
செவ்வாய்க்கிழமை காலை 'லாங் மார்ச் 11 கேரியர்' என்ற ராக்கெட்டின் மூலம் மூன்று புதிய சோதனை செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது.
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல்
அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் சில வீரர்கள் காயமடைந்த நிலையில், அதற்கு பதிலடியாக ஈராக்கில், ஈரான் ஆதரவு போராளிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தில் எந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இல்லை: வெறிச்சோடி கிடக்கும் பெத்லகேம்
பொதுவாக , கிறிஸ்துமஸ் தினத்தன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடமான பெத்லகேமில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி
303 இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி சென்று கொண்டிருந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானத்தை சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்தனர்.
கலிபோர்னியாவில் சிதைக்கப்பட்ட இந்து கோயில்: இந்திய-அமெரிக்க எம்பிக்கள் கண்டனம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்துக்கோயில் சிதைக்கப்பட்ட சம்பவத்தை, கடுமையாக கண்டித்துள்ள இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
2 இந்திய கப்பல்கள் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்: சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரின் காரணமாக கடல்சார் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்திய பணியாளர்களுடன் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், அங்குள்ள பொதுமக்களை பாதுகாக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு
மனித கடத்தல் நடைபெறுவதாக சந்தேகப்பட்டு பிரான்ஸ் சுற்றி வளைத்த விமானத்தில் இருந்த, 303 இந்தியர்களில் சிலர் அந்நாட்டிலேயே புகலிடத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா
ஜப்பானுக்கு சொந்தமான ரசாயன கப்பல் சனிக்கிழமை அன்று, இந்திய கடப்பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்குள்ளான நிலையில், அது ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலை சேதப்படுத்தி காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவில் சுவர்களில் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது
300க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி புறப்பட்ட விமானத்தை "மனித கடத்தல்" என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திய பிரான்ஸ் காவல்துறையினர், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இத்தாலி: ஒரே நாளில் தனித்தனி விமான விபத்துகளில் உயிர்தப்பிய தம்பதி
இத்தாலியில் ஒரே நாளில் சில மையில் தூர இடைவேளையில் நடந்த தனித்தனி விமான விபத்துகளில், தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நியூஜெர்சியில் இருந்து காணாமல் போன, இந்தியாவைச் சேர்ந்த 29வயது பெண் மாணவியைப் பற்றிய தகவல்களுக்கு, ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI) $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.
சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிடும் அமெரிக்கா
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிட்டு வருகிறது அமெரிக்கா.
செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம்
செக் குடியரசின் தலைநகர் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை, முழுவதுமாக நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொள்ளும் வரை, பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க முடியாது என ஹமாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ஏமன் நாட்டின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர்.
H-1B விசா பைலட் திட்டத்தின் தகுதி, தேதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் வெளியிடப்பட்டது; இந்தியர்கள் மற்றும் கனடியர்களுக்கு மட்டுமே தகுதி
H-1B குடியேற்றம் அல்லாத விசாக்களை மீண்டும் தொடங்குவதற்கான அதன் பைலட் திட்டம், ஜனவரி 29 முதல் ஏப்ரல் 1, 2024 வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.